விண்வெளியில் உள்ள அதிசயங்களில் ஒன்றான ‘கருந்துளையின்’ பல வளையங்கள்(மல்டி பேண்ட்)கொண்ட புகைப்படத்தை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா,பல வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் மர்ம முடிச்சாக இருந்து வந்து கருந்துளை(black hole)யினைக் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தை முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து,சீன விஞ்ஞானிகள் கருந்துளையினைச் சுற்றி ‘பல வளையங்கள்'(மல்டி பேண்ட்) இருக்கும் புகைப்படத்தினை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில்,கருந்துளையின் மையப் பகுதியானது கருப்பு நிறத்திலும்,அதனைச் […]