நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின்பதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் உச்சநீதிமன்றம் பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்துள்ள நிலையில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும், அணையின் முழு அதிகாரமும் தமிழகத்திற்கு தான் உள்ளது எனவும் […]
தமிழகம்:முல்லைப் பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஆனால்,அதன்பிறகு மரம் வெட்டுவதற்கு தந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது. இந்நிலையில்,தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையிலும்,அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று […]
உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு தி.மு.க அரசுக்கு தடையாக இருப்பது எது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும்,உறுதித் தன்மையை தெரிந்து கொண்டு 152 அடி வரை தண்ணீரை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் , ஆனால்,கேரள அரசு அளித்த தவறான தகவல்கள் உண்மைக்கு புறம்பாக எழுப்பி வரும் பிரச்சனைகளுக்கு அடிபணிந்த தமிழக அரசு, தண்ணீர் 138 அடியை எட்டும் முன்பே, […]
முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க 5 மாவட்டங்களில் நவ.9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி,தேனி,மதுரை,திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் […]
முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும்,அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக […]
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சர்வதேச நிபுணர்களைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சர்வதேச நிபுணர்களுக்கு இணையாக இந்திய நிபுணர்களும் அறிவார்ந்தவர்களே என்று […]
58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும். இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேக்கடி மதகுபகுதியில் […]