முல்லை பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரையில் இன்று 69.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர், 3.95 கோடி மதிப்பிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கும் […]
முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் நாளை ஐவர் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது.துணைக்குழு தலைவரும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான ராஜேஷ் தலைமையில், ஆய்வு நடைபெற உள்ளது. இதில், பிரதான அணை, பேபி அணை, அணையின் மதகுகள், நீர்மட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுக் குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது மொத்தம் 152 அடி கொண்ட முல்லை பெரியாறு அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.எனவே அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேனி,இடுக்கி,பகுதி மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அணை 138 அடி எட்டியதும் 2 கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. DINASUVADU
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 168 கனஅடியாக அதிகரித்துள்ளது. தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. கேரள மாநிலத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 134.40 அடியாக உயர்ந்துள்ளது.2 நாட்களுக்கு முன் ஆயிரத்து 240 கனஅடியாக […]