நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 168 கனஅடியாக அதிகரித்துள்ளது. தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. கேரள மாநிலத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 134.40 அடியாக உயர்ந்துள்ளது.2 நாட்களுக்கு முன் ஆயிரத்து 240 கனஅடியாக […]