முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை. முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. – மு.க.ஸ்டாலின் கடிதம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார். அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும். அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் […]
டெல்லி:முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி யாரும் தற்போது பேசவேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி யாரும் இப்போது பேசவேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.முல்லைப் பெரியாறில் அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து புகார் இருந்தால் தங்களிடம் முறையிடலாம் என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,முல்லைப் […]
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது […]
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமானது 136 அடியை எட்டியதும் அதனை திறந்து வைகை அணைக்கு கொண்டு சேர்க்கவும், உபரி நீரை திறந்துவிடவும் கேரள அரசானது, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே போல, இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் வினாடிக்கு 6500 கனஅடி நீர் வீதம் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டமானது உயர்ந்து கொண்டே வருகிறது. […]
முல்லை பெரியாரின் அணை பகுதியில் கேரள அரசு தமிழக அரசின் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது. இன்று அதிரடியாக இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அதிரடி முடிவு எடுத்துள்ளார் கே எம் ஜோசப். முல்லை பெரியாரின் அணை பகுதியில் கேரள அரசு தமிழக அரசின் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தம் அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசிடம் எந்தவித ஒப்புதலும் வாங்கவில்லை. இதற்கு அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் […]