வட மாநிலத்தில் மாட்டு இறைச்சி சாப்பிடவர்கள் மீது அங்கு உள்ள இந்து மக்கள் கட்சியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்த இது போன்ற சம்பவங்கள் அங்கு அரேங்கேறி வருகிறது. இந்தநிலையில் வட மாநிலத்தை போல நாகப்பட்டினத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது பைசான் என்பவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் தனது முகநூல் பக்கத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதை பதிவிட்டிருந்தார். இவரது பதிவை பார்த்த அதே பகுதியை […]