கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் கோவையில் 30 பேருக்கு ஒரு கண் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனவிலிருந்து மீண்டவர்களுக்கு மிக பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 264 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் […]
மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு முதல் இதுவரை 52 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மற்றும் அதில் இருந்து மீண்டவர்கள் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா தொற்றால் […]
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதால்,அதன் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகும் போது,அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.இதனால்,நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது,இதன்காரணமாக ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற ‘கருப்பு பூஞ்சை நோய்’ (மியூகோர்மைகோசிஸ்) ஏற்படுகிறது. மேலும்,இந்த கருப்பு பூஞ்சை […]