அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் விலை 2925 என தவறாக பதிவிட்டு நெட்சன்களிடம் மாட்டிக்கொண்டார் இயக்குனர் மு.களஞ்சியம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாங்கி வெளியிடுகிறது. நேற்று முதலே பல தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. […]