சென்னை : ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் , புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை […]
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பயணிகள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை […]
சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலாக மழை பெய்து வருகிறது. அதில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய கனமழை, இப்போது வரை நீடித்து வருகிறது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான RED ALERT விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் MTC பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், […]
சென்னை : தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக நாளை (ஆக.3) முதல் 14ம் தேதி வரை காலை 10.30 – பிற்பகல் 2.30 வரை, இரவு 10 – 12 வரை, பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில், அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது இயக்கப்பட்டு வரும் […]
டிசம்பர் 2ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று, பிற்பகல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், சென்னை எம்.டி.சி பேருந்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், பதிவுபெற்ற போக்குவரத்து சங்க […]