கோவை : நேற்று கோவையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்ற வணிகர்கள் என பலர் கலந்து கொண்ட தொழில்துறை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் , ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் ஜி.எஸ்.டி வரி பற்றி கலகலப்பாக கோரிக்கை வைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த […]
சென்னை: சிறு வணிகர்கள் கட்டட முடிவுச் சான்றிதழ் பெற தேவையில்லை என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019இன் படி அனைத்து வகையான வணிக பயன்பாட்டு கட்டடங்களும் கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என்ற சட்ட விதி தமிழகத்தில் உள்ளது. இதனை பெரு வணிகர்கள் மட்டுமல்ல சிறு வணிகர்களும் தங்கள் வணிக கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்றிதழ் பெற வேண்டும். அதன் பின்னர் தான் […]
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு வசூலிக்கப்படும் தொகையானது, பீக் ஹவர் எனப்படும் காலை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரையில் 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கபடுகிறது. இந்த கூடுதல் பீக் ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. தமிழக விவசாயிகள் விவகாரத்தில் கடுமை காட்ட வேண்டாம்.! […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் பெற 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும்,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21-55 வயது வரையுள்ள தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”கடந்த 20.04.2022 அன்று குறு, சிறு மற்றும் […]
MSME போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும் என கமல்ஹாசன் ட்வீட். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாதிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. #MSME போராட்டத்தைக் கண்டும் […]
நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமா? காவிரி டெல்டாவை சிதைத்து விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக […]
சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை எம்.எஸ்.எம்.இ என சேர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எம்.எஸ்.எம்.இ பிரிவில் இருந்து சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்களை மத்திய அரசு நீக்கியது. இதனால்,எம்.எஸ்.எம்.இ துறைக்கு வழங்கப்படும் கடன்கள் முன்னுரிமைத் துறை கடன்களின் கீழ் வருவதால்,அவை சில்லறை மற்றும் மொத்த வர்த்தகர்களுக்கு மறுக்கப்பட்டது. மேலும்,வேளாண்மையைத் தவிர, எம்.எஸ்.எம்.இ துறைக்கு வழங்கப்படும் கடன்களும் பி.எஸ்.எல். மொத்த […]