அதிக விபத்து ஏற்படும் புலியூர், உப்பிடமங்கலம் சாலையில் உள்ள லிங்கத்தூர் வளைவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் அடுத்த உப்பிடமங்கலம் மேல்பாகம் லிங்கத்தூர் அழகு மலை சுவாமி கோயில் அருகே சாலை வளைவில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி உப்பிடமங்கலம் பகுதி பொதுமக்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை பொறியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற […]