நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா அவதாரம். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உருவெடுக்கவுள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இந்தமுறை சென்னை உட்பட எந்த அணியும் ஐபிஎல் போட்டியில் விளையாட ஏலம் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வந்த ரெய்னா, முதல் முறையாக தொடரில் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உற்சாக செய்தி […]