அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,இக்காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் ,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அவர் வீடு உட்பட 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதியில் […]