கரூர்: நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, அண்மையில் காவல்துறையினரிடம் இருந்து […]
கரூர்: 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டவிரோதமாக பதிவு செய்ததாக பதியப்பட்ட புகாரின் கீழ் அவரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கரூர், குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி சான்றிதழ்கள் மூலம் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கரூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி புகார் பதியப்பட்டது. […]
எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் ஷோபனா ஆகியோருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . இந்த புகாரின் பெயரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அண்மையில், காவல்துறை வசம் இருந்து சிபிசிஐடி பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனை […]
சென்னையில் மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் இ-பாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசின் வழிக்காட்டுதல்களின் படி, பேருந்துகள் […]
2 அரசு பேருந்துகளில் சோதனை முயற்சியாக paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் பொதுப்போக்குவரத்து 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் […]
தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் நேற்று வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது.இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையெடுத்து சென்னையில் நேற்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பின் போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளை இங்கு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை அங்கு தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் வருகின்ற 31-ம் […]
அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் போட்டி போட்டு செல்பி எடுத்த மாணவ மாணவிகள் சென்னையில் உள்ள ஆல்காட் கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேன்சர் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு, கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டு கேன்சர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் மாணவ, மாணவிகள் போட்டி போட்டு செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். DINASUVADU
தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள் கோரியுள்ளோம்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.