மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில்,அப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும்,அதன்படி 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Msc biotech படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் […]
மதுரை:குடியரசுத்தலைவர் தனது உரையில் அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி பேசுகிறார்.ஆனால்,கடந்த 75 ஆண்டுகளாக போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கிவிட்டு யாருக்காக போடப்படுகிறது புதிய அடித்தளம்? என்று எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 75 வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில்,அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி குடியரசுத்தலைவர் உரை பேசுகிறது.ஆனால், 75 ஆண்டுகளாக ஏற்கனவே போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதுதான் இதன் பொருளா என்று மதுரை எம்பி […]
தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் போது, வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், 208 கோடி தேவைப்படுகின்ற ராமேஸ்வரம் […]
இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா? என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசியும் உள்ளன. ஆகவே ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.ஆனால் தடுப்பூசியின் ஒப்புதலுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு […]
ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்துள்ளதாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் […]
“ Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் “ Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, எம்.ஏ இலக்கிய படத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற […]
அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான ஆழ்நில அணுக்கழிவு மையம் இப்போதைக்கு தேவை இல்லை என பிரதமர் மோடி கூறிய நிலையில், அணுசக்தி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிலநுட்பம், இந்தியாவில் இல்லை என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர், அணுசக்தி கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதைக்கு இல்லை […]