சென்னை : தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி குரங்கம்மை தொற்று நோயின் பாதிப்பையொட்டி உலக சுகாதார மையம் (WHO) கடந்த 14-ம் தேதி அவசர நிலையை அறிவித்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவ தொடங்கிய இந்த நோயானது இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் படிப்படியாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுவரை, குரங்கம்மை தொற்று நோயால் 15,000 மேற்பட்டோர் […]