டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை ராணுவ விமானம் மூலம் உடனடியாக மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டுமென கோரிக்கையை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசிய வசந்தகுமாரிடம், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். இந்நிலையில் சென்னையில் வசந்த குமார் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,20% மீனவ மக்கள் உள்ள பகுதி குமரி மாவட்டம், எம்.பி நிதி ரூ.5 கோடியில் ஒரு கோடியை மீனவர்களுக்கு செலவிட உள்ளேன்.எந்த மொழியயையும் திணிக்கக் கூடாது என்பது தான் காங்கிரசின் நிலைபாடு என்றும் […]