மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நகரும் சொகுசு கழிப்பறை பேருந்து, பெண்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு மட்டும் 12 நகரும் சொகுசு கழிப்பறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. நடமாடும் கழிப்பறை பேருந்தில், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஓய்வு எடுக்கும் அறை என பிரத்யேகமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து பலரது வரவேற்பை பெற்று வருகிறது.