உலகிலேயே மிக உயரமான இமயமலையில் இந்த எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 8,848.86 அடி உயரம் கொண்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே இந்த மலையில் ஏற முடியும் என்பதை முறியடிக்கும் விதமாக இரண்டு கால்கள் இல்லாதவரும், கண் பார்வை இல்லாதவரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை மிக குறுகிய நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சான் யிங் ஹங் என்ற பெண்மணி. இவர் ஹாங்காங்கை சேர்ந்த முன்னாள் ஆசிரியர். […]
நேபாளமும் சீனாவும் புதியதாக உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கண்டறிந்ததில் 8848.86 மீட்டர் நீளம் கொண்டது என தெரியவந்துள்ளது. உலகின் மிக உயரமான சிகரமாகிய எவரெஸ்ட் சிகரம் இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருக்கும் என கூறப்பட்டது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர் என 1954 இல் இந்தியாவின் கணக்கெடுப்பில் கூறப்பட்டிருந்தது. […]