செவிலியர்கள் தங்களது தாய்மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பித்த டெல்லியில் ஜி.பி.பண்ட் மருத்துவமனை. கண்டங்கள் வலுத்ததை தொடர்ந்து உத்தரவு திரும்ப பெறப்பட்டது. டெல்லியில் ஜி.பி.பண்ட் என்ற மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள் பேசும்போதும், சில நோயாளிகளுடன் பேசும்போது மலையாளத்தில் பேசுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தற்போது இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]