வீட்டிலேயே அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் செய்வது எப்படி?

பாசி பருப்பு பருப்பு வகைகளில் அதிக சுவை கொண்டது மட்டுமல்லாமல், அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றும் ஆகும். இந்த பாசி பருப்பை வைத்து எப்படி அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் செய்வது என பார்க்கலாம். 

தேவையான பொருள்கள் 

  • பாசி பருப்பு 
  • பச்சரிசி மாவு 
  • வெள்ளம் 
  • நெய் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 
  • ஏலக்காய்
  • தேங்காய் பூ 

செய்முறை 

முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர் திராட்சைகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு, ஒரு சட்டியில் பசி பருப்பை நன்றாக முறுக வறுக்கவும். நன்றாக வறுபட்டதும், அதில் தண்ணீர் ஊற்றி அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும், பச்சரிசி மாவில் தண்ணீர் கலந்து பசி பருப்பில் ஊற்றவும். கத்தியின்றி கிளறி அதில் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து வந்ததும் ஏலக்காய் சேர்க்கவும். அதன் பிறகு முந்திரி, உலர் திராட்சை போட்டு கிளறி, அதில் தேங்காய் பூவையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால் அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் தயார்.