ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் இன்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஓய்வுபெற்ற மூத்த காவல் கண்காணிப்பாளர் அதிகாரி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூற்றுப்படி, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் முகமது ஷாபி மிர் (72) , இவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் கண்ட்முல்லா கிராமத்தில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் அவர் மீது […]
காபூலில் மசூதிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மசூதிக்கு அருகே ஒரு வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. […]
இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொடர்ச்சியாக தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகராகிய காபூல் பகுதியில் உள்ள கலிபா சாஹிப் மசூதியில் நேற்று தொழுகை நடை பெற்றுள்ளது. இந்த தொழுகையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த முஸ்லிம்களை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
அயோத்தியில் புதியதாக கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் மாதிரி புகைப்படத்தை இந்திய இஸ்லாமிய கலச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு வழங்கி உத்தரவிட்டது. அத்துடன், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து […]
அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. ராமர் கோவில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தன்னிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது. அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே அயோத்தி வழக்கில் டெல்லி உச்சநீதிமன்ற தலைமை […]
திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது. இதில் 15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரியாணிவுடன், முட்டைகளும் வைத்து அனைத்து சமுதாய மக்களும் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர். திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் முதற்கொண்டு பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கந்தூரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த நிலையில், ரசூலு இல்லா என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற கந்தூரி விழாவில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு […]
கேரளாவில் பிந்து என்ற பெண்ணுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அவரது பெண்ணுக்கு வரும் 19-ம் தேதி திருமணம் அங்குள்ள ஒரு மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி நடைபெற உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தின் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி ஒன்றுள்ளது. இதன் அருகில் ஒரு வாடகை வீட்டில் உள்ள பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வழிபட உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு பெண்கள் செல்ல கேரளா அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் யாஸ்மீன் சுபெர் அஹமது என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவரின் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அமர்விற்கு வந்தது. இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதி […]
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்து உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பரா பொத்துக்கல்லுவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் இறந்து உள்ளனர்.அவர்களின் உடலை மீட்கும் பணிநடந்து வந்தது.மீட்ட உடலை நீலாம்பூர் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர்.ஆனால் அங்கு இருந்து 40 […]
இந்திய முஸ்லீம்கள் ராமனின் வழி வந்தவர்கள் எனவே அவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும்” – பீஹார் மாநில பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் . இதுவரை கேள்விப்படாத திடுக்கிடும் உண்மையா இருக்கே. அது சரி, அவர்கள் ராமனின் வழித் தோன்றல்கள் என்றால் உங்களது கட்சியின் தலைவர்கள் ஏன்அவ்வப்போது அவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..?