இந்திய பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர். இந்தியா முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 74-வது சுதந்திர தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அவர்களின் சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். […]