மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமாக 149 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் 140 பேர் உயிரிழந்த, தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை […]
குஜராத் மோர்பி தொங்கும் பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் […]
மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் நாளை (நவம்பர் 2) துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இதுவரை 134 பேர் […]
அனுமான் ஜெயந்தியினை முன்னிட்டு குஜராத்தின் மோர்பியில்,காலை 11 மணிக்கு,அனுமானின் 108 அடி உயர சிலை திறக்கப்படும் என்றும்,இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றதில் தான் பெருமைப்படுவதாகவும் ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில்,அனுமான் ஜெயந்தியான இன்று குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். Hanumanji4dham திட்டத்தின் ஒரு பகுதியாக தனியார் நிறுவனம் ஒன்று நாடு முழுவதும் […]
குஜராத்தில் உள்ள மோர்பியில் கார் ஒன்று லாரியில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்ப்டி கிராமத்தின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகவும் கார் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதிகா பாரி கூறியுள்ளார். மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மோர்பி தாலுகாவில் உள்ள […]