கேரளா : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஐ கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு பகுதியில் மீட்புப்பணியில் மாநில மீட்புப்படையினர், தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் மண்ணிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயநாடு நிலச்சரிவு போல, இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியிலும் […]