ஆங்கில பாடகரும் இசையமைப்பாளருமான மான்டி நார்மன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான “ஜேம்ஸ் பாண்ட்” படத்தின் தீம் மியூசிக்கை இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 94 வயதான இவர் லண்டன் மாண்டி நசுரோவிச் நகரில் வசித்து வந்தார். வயது முப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அனைவரும் தங்களது இரங்கலை சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள்.