கடந்த செப்.18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது குறிப்பாக, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற மக்களவை, மாநிலங்களவைகளில் விவாதங்கள் நடந்தது. அதன்பிறகு நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி […]
மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளும், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 4 நாள் முன்னதாக கூட்டத்தொடர் முடித்துவைப்பு. கடந்த மாதம் (ஜூலை) 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடரானது, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தடுத்து, வடமாநிலங்களில் பண்டிகை வரவுள்ளதால், உறுப்பினர்கள் அவரவர் […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூலை மாதம் கூட நடைபெறவேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலதாமதாக செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடர் 11 நாட்கள் மட்டுமே நடந்தது. பின்னர், டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி […]
இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தும் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் எம்.பி வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்தி, ஆங்கிலம் […]