கர்நாடகாவில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் போட்டு வீசப்பட்ட நிலையில், 46 குரங்குகள் உயிரிழந்துள்ளது. கர்நாடகாவிலுள்ள ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் எனும் பகுதியில் நேற்றிரவு 60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கோணிப்பைகளில் கட்டி போட்டு சக்லேஷ்பூர் மற்றும் பேகூர் இடையே உள்ள சாலையில் வீசி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கோணிப்பைக்குள் இருந்த 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக […]
டெல்லியில் உள்ள 60 குரங்குகளுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அந்த குரங்குகளை தற்பொழுது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லியில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள வனப்பகுதியில் வசிக்கக்கூடிய குரங்குகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 குரங்குகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி வனத்துறையினர் குரங்குகளை தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ஹைதராபாத் மிருகக்காட்சி சாலையில் […]