சென்னை : தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி குரங்கம்மை தொற்று நோயின் பாதிப்பையொட்டி உலக சுகாதார மையம் (WHO) கடந்த 14-ம் தேதி அவசர நிலையை அறிவித்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவ தொடங்கிய இந்த நோயானது இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் படிப்படியாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுவரை, குரங்கம்மை தொற்று நோயால் 15,000 மேற்பட்டோர் […]
குரங்கு அம்மை வைரஸ் நோயின் அறிகுறிகளுடன் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ஏழு வயது குழந்தை கேரளாவில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை யுள்ளது. அவரது மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட அறையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் பரவாமல் இருக்க, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்த கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல், பாதிக்கப்பட்ட நபரை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், கை சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்தல் அல்லது சோப்பு […]
குரங்கு அம்மையைத் தவிர்க்க அரசு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பட்டியலிட்டுள்ளது. குரங்கு காய்ச்சலைத் தவிர்க்க செய்ய வேண்டியவை: பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தவும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அருகில் மாஸ்க் மற்றும் கையுறைகளை அணியுமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. குரங்கு காய்ச்சலைத் தவிர்க்க செய்யக்கூடாதவை: பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் ஆடைகள் மற்றும் படுக்கைகளைப் பகிர்ந்துகொள்வது பாதிக்கப்பட்ட மற்றும் நோய்த்தொற்று இல்லாதவர்களின் துணிகளை ஒன்றாக துவைப்பது ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தால் வெளியே செல்வதற்கு […]
குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம். குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் சில மாநிலங்களில் குரங்கம்மை நோய் படிப்படியாக சற்று வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் இதுவரை 5 பேருக்கு நோய் தொற்று பஹிபு கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று டெல்லியில் 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது செய்யப்பட்டது. இதனால் […]
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு. இந்தியாவில் குரங்கு அம்மை நோய் சற்று வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்றாலும், தற்போது ஒரு சில மாநிலங்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை இன்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கு […]
கடந்த மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து வந்த 30வயது மதிக்கத்தக்க நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ள்ளது. தற்போது இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று சிறியதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றைப்படையில் எட்டி பார்க்க ஆரம்பித்து உள்ளது. ஏற்கனவே, கேரளாவில் 4ஆகவும், இந்திய முழுக்க 6ஆகவும் இருந்த குரங்கு அம்மை தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, தற்போது ஒன்று கூடியுள்ளது. ஆம், கடந்த மாதம் 27ஆம் தேதி, துபாயில் இருந்து, கேரளா கோழிக்கூடு விமான நிலையம் வந்த 30 […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த நபருக்கு குரங்கம்மை உறுதி. கேரளாவின் மலப்புரம் பகுதியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை உறுதியான நபருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு […]
ஆப்பிரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் குரங்கு அம்மையால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவாகியுள்ளது. பிரேசிலில் 41 வயதான ஒருவர் குரங்கு அம்மையால் உயிரிழந்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கு வெளியே நோயால் இறந்த முதல் நபர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலின் சுகாதார அமைச்சகம் கூறுகையில், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3,750 நோயாளிகளில், 120பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் நேற்று(ஜூலை 29) இறந்துவிட்டதாக கூறினர்.
ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. அரசுக்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. குரங்கம்மை நோய் குறித்து யூகங்களுக்கு […]
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனி வார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் […]
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான வழிகாட்டுதலை மையம் வெளியிட்டுள்ளது. குரங்கு அம்மை என்பது ஒரு ஜூனோசிஸ் வைரஸ் ஆகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரியம்மை நோயாளிகளிடம் காணப்படுவதைப் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது. 21 நாள் தனிமைப்படுத்தல், மாஸ்க் அணிதல், கை சுகாதாரத்தைப் பின்பற்றுதல், காயங்களை முழுமையாக மூடி வைத்தல் மற்றும் முழுமையாக குணமடையும் வரை காத்திருப்பது ஆகியவை வழிகாட்டுதல்களில் அடங்கும். தேசிய தலைநகரில் குரங்கு அம்மையின் தொற்று ஓன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் மொத்த நோயாளிகளின் […]
அமெரிக்கா மேலும் 8,00,000 குரங்கு அம்மை தடுப்பூசிகளுக்கு கையெழுத்திட்டுள்ளது. குரங்கு அம்மை வைரஸ் முக்கியமாக தோல் தொடர்பு மூலம் பரவுகிறது. மேலும் தொற்று உள்ள ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. பல வாரங்களுக்கு பிறகு தற்போது, குரங்கு அம்மை தடுப்பூசியின் கிட்டத்தட்ட 8,00,000 டோஸ்கள் விரைவில் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் நேற்று(ஜூலை 27) தெரிவித்தனர். அமெரிக்கா முன்னதாகவே 3,10,000 க்கும் மேற்பட்ட டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசியை மாநில மற்றும் உள்ளூர் […]
வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் குரங்கு அம்மை பரிசோதனை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை கிண்டியில் உள்ள குரங்கு அம்மை பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை கண்டறியப்படவில்லை. தமிழகம் வந்த சிலருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டன. புனேவுக்கு மாதிரிகளை பரிசோதித்ததில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் […]
சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், கடுமையான மூளையழற்சி நோய்க்குறி, மேற்கு நைல் மூளையழற்சி, டெங்கு, வைரல் ஹெபடைடிஸ், நிபா, பன்றிக் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் குரங்கு அம்மை என அனைத்தும் நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் கேரளா 3 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் பல வெளிநாட்டினர் வசிக்கின்றனர். வேலைக்காகவோ அல்லது படிப்புக்காகவோ கேரளாவைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். கேரளாவைத் தவிர, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் […]
குரங்கு அம்மையின் நான்காவது வழக்கை இந்தியா கண்டுள்ள நிலையில், முழு வேகத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. குரங்கு அம்மையை சமாளிப்பதற்கான அணுகுமுறை கோவிட் -19 இன் அணுகுமுறையைப் போன்றது என்று “லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை”-யின் மருத்துவர் இன்று நியூஸ் 18 இடம் தெரிவித்தார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தோல் தொற்று புகார்களுடன் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் தற்போது நிலையாக […]
டெல்லியில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நகரின் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு வெளிநாட்டுப் பயண வரலாறு இல்லை. இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நான்காவது உறுதிப்படுத்தப்பட்ட வழக்கு இதுவாகும். இதற்கு முன்பு கேரளாவில் 3 குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தோல் புண்களால் 34 வயதான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் நேற்று புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) […]
உலக சுகாதார அமைப்பு வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு இன் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இன்று அறிவித்தார். உலகளவில் 75 க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 16,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஆப்பிரிக்காவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும்,உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும், தற்போது உலக சுகாதார அமைப்பு […]
ஒரு புதிய ஆய்வில் 95% குரங்கு அம்மை பாலியல் செயல்பாடு மூலம் பரவுகின்றன என தெரியவந்துள்ளது. கொனோரியா, ஹெர்பெஸ் அல்லது எச்.ஐ.வி போன்ற ஒரு வேரூன்றிய பாலியல் செயல்பாடு மூலம் பரவும் நோயாக (STD) இருக்கலாம் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்டுள்ள புதிய ஆராய்ச்சியின்படி, 95% குரங்கு அம்மை நோய் பாலியல் செயல்பாடு மூலம் பரவுகின்றன என தெரிவித்துள்ளது . லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் […]
வேகமாக பரவும் குரங்கு அம்மை தொற்றால் 14,000 பேருக்கு பாதிப்பு.. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு. உலகளவில் 70க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 14,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குரங்கு அம்மை தொற்றால் ஆப்பிரிக்காவில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும், உயிர்களைக் […]
கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு. கேரளாவின் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை உறுதியான 31 வயதான நபர் அண்மையில் துபாயில் இருந்து கேரளா திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் குரங்கு அம்மை தொற்று கேரளாவில் […]