நொய்டாவில் பெண் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெல்லியை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நோயாளி 47 வயதான பெண் என்பதும், அவர் நேற்று(ஜூலை 26) மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும், அதன் பிறகு அவரது இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக லக்னோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினர். மேலும் நோயாளி தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவுகள் […]
உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக பெண் ஒருவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பிதுனா தெஹ்சில் மொஹல்லா ஜவஹர் நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த ஒரு வாரமாக குரங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து கடந்த 12 ஆம் தேதி திரும்பிய கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அவரின் இரத்தத்தை பரிசோதிப்பதற்காக இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மாநில சுகாதார அமைச்சர் வீனா […]