சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 2 விமானங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழக்தை நெருங்கி வருவதன் காரணமாக நாளை வடதமிழகம் பகுதியில் கனமழை பெய்ய உள்ளது என்பதால், அதனை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, விமான சேவைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையத்திற்கு வரும் தூத்துக்குடி மற்றும் ஷீரடியில் இருந்து வரும் விமானங்கள் , சென்னையில் இருந்து […]
இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.அது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வேகம் அதிகரித்து 15கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நேற்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே போல் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் […]