இந்தியாவுக்கு வருகை தந்த மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட். பிரான்ஸ் நாட்டில் உள்ள நகர நாடான மொனாக்கோவின் இளவரசர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர் வருகை இருநாட்டு உறவை பலப்படுத்தும் என்று சொல்லபடுகின்றது.இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இளவரசர் ஆல்பர்ட் நேற்று டெல்லிக்கு வந்தடைந்தார். இவரின் வருகையை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , மத்திய பாதுகாப்பு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும்ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.