ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். இன்று குடியரசு தலைவர் தேர்தல் நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சி காங்கிரஸ் கூட்டணி சார்ப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு தான் வெற்றி ஏறக்குறைய உறுதி என்றாலும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக வாக்களித்து, சில நடுநிலை கட்சிகளும் ஆதரவளித்தால் […]