அதிமுக மாநிலவை எம்.பி. முகமது ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அதிமுக கட்சியின் மாநிலவை எம்.பி. முகமது ஜான்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று அவர் உயிரிழந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் எம்.பி. முகமது ஜான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். அவரின் மறைவிற்கு தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.