இப்ராகிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு மேற்கொள்ளப்படும் முதல் பயணம் இதுவாகும். முன்பு முகமது சோலி அதிபராகப் பதவி ஏற்கும் போது நரேந்திர மோடி மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவுக்கு நேற்று புறப்பட்டுச்சென்றார். அங்கு சுஷ்மா சுவராஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் இன்று அதிபர் இப்ராகிம் முகம்மது சோலியை சந்தித்து பேசினார். […]