இந்தியாவில் மோடி ஏற்படுத்திய பேரழிவு தான் கொரோனாவின் இரண்டாம் அலை என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. ஒருபுறம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்தாலும், மறுபுறம் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆக்சிஜனின்றி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், சுகாதாரத்துறை பெரும் சிக்கலை எதிர் கொண்டு வருவதுடன் நாளுக்கு நாள் நாட்டின் நிலை மோசமாகிக் […]
பாப் பாடகி ரிஹானா விவசாயிகளின் போராட்டத்திற்கு தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்தாலும், கொரோனா தடுப்பு ஊசி கேட்டு ரிஹானாவின் நட்டு பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு ஊசிகளை இந்தியா நன்கொடையாக அனுப்பியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு […]
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்பொழுது நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது, 20 க்கும் மேற்பட்ட கட்சியினர் குடியரசு தலைவரின் உரையையும் புறக்கணித்தனர். இந்நிலையில் இதனை அடுத்து இன்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக […]
வேண்டுமென்றே மோடியால் போடப்பட்ட ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தெலுங்கானாவினை பூர்விகமாக கொண்ட ஐஸ்வர்யா எனும் மாணவி டெல்லியில் கல்லூரி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மனமுடைந்த நிலையில் இருந்த அவர், தனது படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர், கடந்த 2 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் இது […]
இப்போது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல, நிவாரணம் தான் என பிரதமர் உரை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றுவதாக கூறியதும் ,மக்கள் நிவாரண உதவிகளை பிரதமர் மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதுடன், வேலை இல்லாத் திண்டாட்டம் ,பொருளாதார வீழ்ச்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை ஏற்றம் என […]
9 கி.மீ நீளமுள்ள லே நெடுஞ்சாலை குகைவழிப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இமாச்சல பிரதேசம் மணாலி மலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ரோத்தங் கனவாய் பகுதியில் குகை வழிப்பாதையை குடைந்து தற்போது புதிதாக மலைவழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகை வழி பாதையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு இருந்தனர். இந்நிலையில் இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகள் நேற்று நடைபெற்று […]
இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 38 ஆயிரத்து 900 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு இந்திய மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியை செய்து வரக்கூடிய ராணுவத்தினரின் தற்காப்பை பலப்படுத்தக்கூடிய விதமாகவும், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பிற்கும் ஏற்றவாறு தற்பொழுது இந்திய ராணுவ படையினருக்கு தேவையான பல்வேறு தளவாடங்கள் மற்றும் சாதன […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு போடப்பட்டு இருந்தது. இன்று ஊரடங்கு இந்தியாவில் முடிவடையும் நிலையில் இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மே 3ஆம் தேதி வரை மேலும் இந்த ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும் ஏப்ரல் 20க்கு பிறகு சற்று விதிமுறைகளின்படி தளர்த்தப்படும் எனவும் கூறியிருந்தார். அதன் பின்பு […]