சென்னை:போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் சென்னை முழுக்க மழைநீரால் மிதந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கடந்த 3 நாட்களாக சென்று நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.அதேபோல,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். […]