அரசியல் சாசனத்துக்கு விரோதமாக மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் அரசியல் சாசன விரோத செயலை நிதி ஆயோக் தலைமை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார். 14வது நிதிக் குழுவை மிரட்டி, மாநில அரசுகளின் வரி வருவாயில் இருந்து திருட அனுமதிக்கும் வகையில், பிரதமர் மோடியே அரசியல் சாசனத்துக்கு […]
மோடி அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்கள் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அதாவது வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் 700 பேருக்கும் மரியாதை செலுத்துவோம். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டும் […]
நிபா வைரஸ் தாக்குதலை முறியடிக்க கேரளா அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு என்றும் உறுதுணையாய் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேரளாவில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்க்காக சென்றிருந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், உலக அளவில் இந்தியாவிற்கு உயரிய இடத்தை பெற்றுத்தர முயற்சித்து வருகிறோம் என்றும், மக்கள் அதற்காக தான் மீண்டும் ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி […]
டெல்லி: வரும் பிப்ரவரி முதல் ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக விலை மதிப்புள்ள போன்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சீனா, கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை இந்தியர்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசின் இந்த திட்டத்தால் […]