உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கருட் சட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்பொழுது கருட் சட்டிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர், விரைவில் விசாரணை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை […]