இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவாக்ஸின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவின் நிறுவனமான மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விண்ணப்பித்தது. மேலும், மும்பையில் இருக்கும் சிப்லா […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக்கியுள்ளனர். மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க அனுமதி இல்லை என்று மாடர்னா, ஃபைசர் ஆகிய அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அதிகரித்துள்ளனர். இந்நிலையில், மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனத்தை அணுகியுள்ளன. பஞ்சாப் மாநில அரசு கொரோனா தடுப்பூசியான மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனத்தை நேரடியாக […]
அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு அவசர சேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.ஆகவே தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனம் தயாரித்து வரும் […]