மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு இந்தோனேசியா அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக பரவி வரும் நிலையில், தற்பொழுது கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமாக உலகம் முழுதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தோனேசியாவிலும் தற்பொழுது கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மார்ச் மாதம் முதலே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தோனேசியாவில் மாடர்னா […]
இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவாக்ஸின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவின் நிறுவனமான மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விண்ணப்பித்தது. மேலும், மும்பையில் இருக்கும் சிப்லா […]
12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கும் தங்களது தடுப்பூசி வேலை செய்வதாக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முக கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி சுத்தமாக இருப்பதையும் கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தற்போது கொரோனாவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் […]
கொரோனா தடுப்பூசியை ரூ.1,850 முதல் ரூ.2,750 விற்க இருப்பதாக மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை ஒரு டோஸுக்கு 25 முதல் 37 டாலர் வரை கட்டணம் வசூலிக்கபடும் என்றும் இது உத்தரவிடப்பட்ட தொகையைப் பொறுத்து என்று மாடர்னா தலைமை நிர்வாகி ஸ்டீபன் பான்செல் ஜெர்மன் வார இதழான வெல்ட் அம் சோன்டாக் (வாம்ஸ்) இடம் கூறினார். கடந்த திங்கட்கிழமை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி, ஐரோப்பிய ஆணையம் […]
அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி 95% பலன் தருவதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் அறிவித்துள்ளார். இதற்கிடையில், கடந்த மாதம் இந்த தடுப்பூசி சோதனையின் இடைக்கால முடிவுகளை அந்நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று வெற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், 30,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தபட்ட முதற்கட்ட […]
அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது. ஒரு பேட்டியில் மாடர்னா தனது “எம்ஆர்என்ஏ -1273 ஐ” அறிமுகப்படுத்த நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பல விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது, அதன் 3 ஆம் கட்ட சோதனையில் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 7,451,354 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 211,805 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து இந்த நிறுவனம் கூறுகையில், […]
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. தற்போது கொரோனாவைரஸ் சீனா மட்டுமல்லாமல் பலஉலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதனால், கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கி உள்ளன. இதில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் தொடக்க கட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. சில நாடுகள் இறுதி கட்டத்தை எட்டி […]