ரியல்மி, இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கி ஒரு வருடமே ஆகிய நிலையில், சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனம், இந்தியாவில் மே 2018ல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் சூடு பிடித்த ரியல்மி பிராண்டு, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் […]