மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. […]
நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் நீண்ட காலமாக பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளை தயாரித்தும் வந்துள்ளனர்.இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகள், தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம் பாதுகாத்து வந்தது.இவை நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது.மேலும்,இந்த ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும் ஆடைகள் உணர்த்துவதாக […]
நீதிமன்ற குமாஸ்தாவின் ஊதியத்தைவிட அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவாக இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதியன்று தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.இன்று பலரும் மருத்துவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த […]