தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த பின் பேசிய சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் முன்மாதிரியான சட்டமன்ற உறுப்பினராக இருக்கேன் என்று பலர் என்னை புகழ்கிறார்கள். ஆனால், என் தொகுதி மக்கள் பாராட்டினாலும், வேறு தொகுதி மக்கள் மனதிற்குள் என்னை திட்டவே செய்வார்கள். சேப்பாக்கம் தொகுதியில் முன்பு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற […]