தமிழக சட்டபேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் மூன்றாவது நாளான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைக்கு கேள்வி – பதில் நேரத்துடன் தொடங்கும் சட்டப்பேரவையில் பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட இருந்தனர். குறிப்பாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நந்தகுமார் (கோவை), மகராஜன் (நெல்லை), சுப்பிரமணியன் (ஈரோடு), தர்மராஜ் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு இணையமைச்சர் எல் முருகன் இன்னோவா கார்களை பரிசளித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த நிலையில், அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன் உடனிருந்தார். […]
மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட இணைந்து நிற்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றனர். இந்த நிலையில், இயல்பு வாழ்கை திரும்பிட இணைந்து […]
2 நாட்களில் 2 எம்எல்ஏக்கள் மறைந்த நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நாளை ( பிப்ரவரி 29-ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது கழக மக்களவை மற்றும் மாநிலவை உறுப்பினர்களை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2 நாட்களில் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் […]
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை காலை தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் ,அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.இதை தொடர்ந்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ,சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா அறிவித்து ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்நிலையில் நேற்று மாலை இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் […]