வயதானவர்களுக்காக சுவாமிமலையில் மின்தூக்கி அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் உள்ள சுவாமி மலை அதிக அளவில் மக்கள் வந்து செல்ல கூடிய இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் படிகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது மிக சிரமமாக உள்ளதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கூறியுள்ளார். எனவே, அவர்களுக்காக மின்தூக்கி அமைத்திட […]