சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டார். அடுத்த நாள் ஆகஸ்ட் 28இல் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க, தங்கள் தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி வருகின்றன. ஏற்கனவே, ஜபில் (Jabil) எலெக்ட்ரானிக் நிறுவனம் திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீடு செய்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிகாகோவில் வைத்து கையெழுத்தாகின. அதே போல, சான் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க, ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க, தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து தற்போது சிகாகோவில் உள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு […]
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சான் பிராசிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சிகாகோவிற்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிகாகோவில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பிரபல தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் அவர்கள் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தது வருகிறார். இதுவரையில் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்நாட்டில் […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் பயணத்தில், தற்போது சிகாகோ சென்றுள்ள முதல்வர், அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் சுமார் 900 […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஓய்வு நேரங்களில் முதல்வர், ஓட்டுனரில்லாத காரில் பயணிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. சிகாகோ பயணத்தின் போது, அங்குள்ள சாலையில் மகிழ்ச்சியாக தனியே சைக்கிள் பயணம் செய்யும் வீடீயோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் இளம் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சான் பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சிகாகோ சென்றடைந்தார். சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோவிலும் உள்ள தமிழர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிரான்சிஸ்கோவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு, அங்குள்ள தமிழர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஓய்வு இடையில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதே போன்று, தற்போது […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோவில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்து வருகிறார். முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிகாகோ வந்துள்ளார். சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோவில் முதலமைச்சருக்கு அங்குள்ள அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிராசிஸ்கோவில் முதலீட்டாளர் மாநாடு, ஆப்பிள், […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி மேம்பட பன்னாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார். முன்னதாக சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்து தமிழர் பரம்பரியதோடு அன்புடன் வரவேற்றனர். அதன் பின்னர், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு பன்னாட்டு தொழில் நிறுவன […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த வாரம் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் மத்தியில் உரையாற்றி, தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழல் பற்றி விவரித்தார். இதனை அடுத்து, முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 6 முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் சுமார் 900 கோடி ருபாய் முதலீட்டில் தோராயமாக 4000 பேருக்கு வேலை கிடைக்கும் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதல் நாளில் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், பன்னாட்டு தொழிலதிபர்கள், தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து நேற்று முதல் நாளில் 6 முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ரூ.900 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீடு கிடைத்துள்ளது என்றும், சுமார் 4000க்கும் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும் வகையில் இந்த 17 நாட்கள் பயணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்படியாக இன்று நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 பன்னாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சான் பிராசிஸ்கோவில் […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பேபால், மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் முன்னேற்றம் காண, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். முன்னதாக, துபாய், சிங்கப்பூர், ஜப்பான் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவில் உள்ள சான் பிராசிஸ்க்கோவிற்கு சென்றுள்ளார். அவருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணமாக சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோ சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் வழியாக சான் பிராசிஸ்க்கோ புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் துபாய் சென்றடைந்தார். பின்னர், துபாயில் இருந்து […]
சென்னை : நேற்றிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அவர் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்னர் முதல்வர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி இ-மெயில் வாயிலாக வந்துள்ளது. இந்த விமான நிலைய ஆணையத்திற்கு வந்த இந்த மிரட்டல் செய்தி பற்றிய தகவலானது விமானம் புறப்பட்ட பின்னர் தான் சென்னை […]
சென்னை : நாளை முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பயண விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். அவர் அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, தொழில் நிறுவன முதலீட்டர்களுடன் ஆலோசனை நடத்தியும் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க உள்ளார். இதற்கு முன்னதாகவே, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்க பயணம் மேற்கொண்டு முதல்வர் வருகைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளார். இன்று (ஆகஸ்ட் 27) […]
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதை அடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் ஓர் முக்கிய செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு 17 நாள் பயணமாக செல்ல உள்ளார். அதற்கிடையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், அதன் அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் […]