வேலூர் தொகுதியில் திமுக விற்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது பின்னோக்கி இருந்த திமுக வேட்பாளர் கத்தி ஆனந்த் பிற்பகலில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட கூடுதலாக […]
தமிழகத்தின் தந்தையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலைஞர் நினைவை போற்றும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி , புதுவை முதல்வர் நாராயணசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய மம்தா, கருணாநிதி எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியவர் […]
“என் துயருக்கு இரங்கல் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி” என்று கூறி ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்கள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். திரையுலகத்தில் முன்னணி நடிகராகவும் சமூக செயல்பாடுகளிலில் முன்னின்று இருக்கும் நடிகர் விவேக் அவர்களின் தயார் மணியம்மாள் (89) அவர்கள் நேற்று காலமானார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சங்கரன்கோவில் அருகே கிராமத்தில் இறுதி நிகழ்வுகள் நடந்தது. அவர் தம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , கவிப்பேரரசு வைரமுத்து , மதிமுக […]
இன்று சென்னையில் திமுக நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் , தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்துகின்றார். மேலும் பேசிய அவர் தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்த இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது.இவர்கள் யாகத்துக்கு செய்யும் பணம் மக்களின் வரி பணம்.யாகம் நடத்தும் இடம் அரசாங்கம் இடம் .தலைமை செயலகத்தில் யாகம் நடத்துவது சட்டத்தை மீறும் செயல்.யாகம் நடத்த வேண்டுமென்றால் ஜெயலலிதா சமாதியில் யாகம் நடத்து.கோட்ட்டையில் யாகம் நடத்துவது என்ன நியாயம் என்று கேள்வி […]
சிபிஐ விசாரணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வதால் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், முதலமைச்சர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார்.முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது .உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து, வழக்கை சந்தித்திருக்க வேண்டும் .ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக திமுக உழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் […]
திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திமுகவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,திமுகவின் புகார் மீது முதற்கட்ட விசாரணை எப்போது முடியும்? என லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஜூன் 22-ம் தேதி முதலே திமுகவின் புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்தது. இதனால் […]
தினகரனுடன் எம்.எல்.ஏ கருணாஸ் திடீரென்று சந்தித்துள்ளார். இதேபோல்எம்.எல்.ஏ கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். எம்.எல்.ஏ கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது :சபாநாயகர் ஒரு தராசு மாதிரி நடுநிலையாக நடக்கவேண்டியவர் ஒருதலை பட்சமாக நடக்கின்றார்.நான் என்னுடைய தனிநபர் தீர்மானத்தை கொடுத்துள்ளேன்.சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய சொல்லி கொடுத்துள்ளேன் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.என்னை பொறுத்த வரை ஊடகங்களும் சரி , பொது மக்களும் சரி பரவலாக என்னை திமுக […]
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்களை வைத்து நடைபெறும் ஆடம்பர விழாவுக்கு வரமாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடி முடித்தார்கள். நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) அன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்ற முறையிலும் […]