மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 8.52 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் 3 ஆயிரம் போலீசாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மிசோரமில் வாக்குப்பதிவு மையத்திற்கு […]