தடுப்புக்காவலில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மியான்மர் கவிஞர் கெத் தி அவர்களின் உடல், உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மியான்மரில் ஜனநாயக ரீதியான ஆட்சி கலைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரவோடு இரவாக ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து மியான்மரில் ராணுவத்தினரின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக மியான்மரில் உள்ள கெத் தி எனும் கவிஞர் அவர்கள் “தலையில் சுடுகிறார்கள், ஆனால் புரட்சி இதயத்தில் இருக்கிறது” என […]
மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெற்ற பொழுது எம்.பிக்களாக இருந்த அனைவரையும் மியான்மரில் உள்ள ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைது செய்யப்பட்டு மியான்மரில் […]
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடக்கும் விதமாக நள்ளிரவில் நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியதுடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் […]
மியான்மரில் ஊரடங்கை மீறியதற்காக 444 பேர் ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்வதால், பல நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறும் நபர்களுக்கு அரசாங்கம் சில அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் மியான்மரில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 444 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். […]
நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இந்திய காவல் பணி அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் திட்டத்தினால் நம் தூரக்கிழக்கு அண்டை நாடான மியான்மர் அரசு அங்கு பதுங்கியிருந்த வடகிழக்கு மாநிலத்தில் தீவிரவாத செயல்கலில் ஈடுபட்ட 22 பயங்கரவாதிகளை ஒப்படைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களன அஸ்லாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சிறப்பு விமானம் மூலமாக மணிப்பூர் மற்றும் அஸ்லாம் மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த மாநில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த 22பயங்கரவாதிகளை […]
ரோஹிங்கியா மக்கள் இனஅழிப்பு தொடர்பான ஐநாவின் குற்றச்சாட்டை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள ரக்கைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கடந்த ஆண்டு மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 7 லட்சம் ரோஹிங்கிய இன மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து ஐநா மனித உரிமை ஆணையம் நியமித்த குழுவினர் […]
பெட்ரோல் குண்டு மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “யான்குன் நகரில் அமைந்துள்ள மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சியின் மாளிகை மதில்சுவரின் மீது இன்று (வியாழக்கிழமை) பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்றபோது சூச்சி அவரது இல்லத்தில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. […]